முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அரசுகளின் நிதி அதிகாரத்தை பறிப்பதா? முதல்வர்

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.23-​ சரக்குகள், சேவை வரிகள் சட்டதிருத்த மசோதாவை அவசரப்பட்டு நிறைவேற்றக்கூடாது, மாநில அரசுகளின் ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் நிறைவேற்றவேண்டும் என்று பிதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்​அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:​ நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் சரக்குகள் மற்றும் சேவை வரிகள் விதிப்பு தொடர்பாக அரசியல் சட்டதிருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது நிதிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதை தாnullங்கள் அறிவீர்கள்.   இது தொடர்பாக, மாநில அரசுகளிடம் இருந்து பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கருத்துக்களை கோரியுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு பாராளுமன்ற நிலைக் குழுவை தொடர்பு கொண்டு வருகிறது. மேலும். இந்த கடிதம் வாயிலாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தங்களுக்கு (பிரதமர்) விளக்க விரும்புகிறேன். அரசியல் சட்டப்படி மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக, அரசியல் சட்ட திருத்தம் மூலம் இந்திய அரசு ஆக்கிரமித்து வருகிறது. அரசியல் சட்டங்கள் திருத்தப்படும் போதெல்லாம், ஏதாவது ஒரு வகையில், மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.   மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவை மாநில அரசுகள்தான். மக்களுக்கு தேவையான அடிப்படை சேவைகளை அளிப்பதிலும், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும் மாநில அரசுகளுக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. நமது அரசியல் அமைப்பு முறைப்படி, மாநில அரசுகளின் நிதி ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக இருப்பது விற்பனை வரிதான் இந்த வரியை சார்ந்து தான் மாநில அரசுகள் உள்ளன.   எனவே, எந்தவொரு வரி சீர்திருத்த நடவடிக்கையாக இருந்தாலும் அது மாநில அரசின் நிதி சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது. சில சமயங்களில், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகள் மத்திய அரசால் ஈடு செய்யப்பட்டு வந்தாலும், சீர்திருத்தமானது மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. எங்களது மிகப்பெரிய கவலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகள் குறித்ததுதான். இந்த புதிய முறையின்படி, அனைத்து மறைமுக வரிகளும் ஒரே பெயரின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. மறைமுக வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில், வரிகள் விதிப்பால் ஏற்கனவே மாநில அரசுகளுக்கு உள்ள குறைவான அதிகாரத்தில் மேலும் கை வைத்து விடக்கூடாது.   சரக்குகள் மற்றும் சேவைவரிகள் முறையை செயல்படுத்துவதால் எந்த வித நன்மையும் விளைய போவதில்லை. முதலில் இரண்டு விகிதமாகவும், பின்னர் ஒரே விகிதமாகவும் வரிகள் விதிக்கப்படுவது பலன் அளிக்காது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வரி நடுநிலை விகிதமானது. 17 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதனால் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும். இதை சரக்குகள் மற்றும் சேவை வரிகள், முறையின் எந்தவொரு செயல் திட்டங்களாலும் சரி செய்ய முடியாது. மாநிலங்கள் சில முக்கியத்துவங்களை கருதி சில பொருள்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கும் சில பொருள்களுக்கு வரிகளை குறைக்கலாம்.   இதுபோன்ற சூழ்நிலைகளில் மாநில அரசுகளுக்கு தரப்பட வேண்டிய நிவாரணம் குறித்து சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தெளிவில்லாத இந்த மசோதாவினால் எந்தவித பலனும் ஏற்படாது. இந்த மசோதாவை நிறைவேற்றும் முன்பு அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும். மாநில அரசுகளின் சம்மதம் இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற கூடாது. எந்தவொரு வரி சீர்திருத்தங்களும் பொருளாதார திறனை மேம்படுத்துவதையும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். சாதாரன மனிதர்களுக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். மாநில அரசுகளின் நிதி சுதந்திரத்தை பாதிக்க கூடியதாக இருக்க கூடாது. ஒரு கூட்டாட்சி அமைப்பு முறையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி உள்ளிட்ட விரிவான வரி சீர்திருத்தத்தை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் இடையே ஒரு உறுதியான பிணைப்பும், ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். இவை பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் அமைவது மிகவும் அவசியம். எனவே சரக்குகள் மற்றும் சேவை வரிகள் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை அவசரப்பட்டு நிறைவேற்றக்கூடாது. விரிவான ஆலோசனை நடத்தி மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் அதை நிறைவேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் நீnullங்கள் தலையிட்டு சுமூகமான முடிவை மேற்கொள்ள முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்