முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் தம்பிகள் குண்டர் சட்டத்தில் கைது

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவொற்றியூர், நவ.2 -மீனவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.பி.சாமி. இவரது தம்பிகள் கே.பி.சங்கர், கே.பி.சொக்கலிங்கம். கடந்த 2006-​ம் ஆண்டு திருவொற்றியூர் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த மீனவர் செல்லத்துரை கொலை வழக்கிலும், மீனவர் வேல் என்பவர் காணாமல் போன வழக்கிலும், கே.பி.சங்கர், கே.பி.சொக்கலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதில் கே.பி.சங்கர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநகராட்சி 5​வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.  சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பரோலில் வந்து கவுன்சிலராக பதவி ஏற்றார். இவர்கள் இருவர் மீது கொலை, கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இந்த வழக்கில் கே.பி.பி.சாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

கே.பி.சங்கர், கே.பி. சொக்கலிங்கம் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இதற்கான ஆணை வேலூர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே சிறையில் இருக்கும் கே.பி.சங்கர், கே.பி.சொக்கலிங்கம் இருவரிடமும் கையெழுத்து வாங்கசென்ற உதவி கமிஷனர் சங்கரலிங்கத்தை கே.பி.பி.சாமியின் தம்பிகள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி உதவி கமிஷனர் சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கே.பி.சங்கர் கே.பி.சொக்கலிங்கம் மீது கொலை மிரட்டல் தகாத வார்த்தைகளால் திட்டுவது ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்