முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட செயலாளர் - செல்லூர் கே.ராஜூ

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.30 - மதுரை மாநகர், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் ஏ.கே.போஸ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் செல்லூர் கே.ராஜூ (கூட்டுறவுத்துறை அமைச்சர்) நியமிக்கப்படுகிறார். 

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் மு.முருகன் எம்.எல்.ஏ, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். (இவர் ஏற்கெனவே வகித்து வரும் முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்)

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் கே.சி.ஆணிமுத்து (மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்) நியமிக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழுஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்