முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டுகளை ஊக்குவிக்க ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துவக்கம்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.15​- பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்காக சென்னையில் மிக பழமைவாய்ந்த கிளப் சார்பில் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துவங்கப்படுகிறது. பிரபல தொழிலதிபரும், கிளப்பின் தலைவருமான எம்.ஏ.எம்.ராமசாமி இதனை நாளை(16ம் தேதி) துவக்கி வைக்கிறார். ஒரு சில விளையாட்டுகளுக்கு போதிய ஆதரவும், ஊக்குவிப்பும் கிடைக்காததால், அந்த விளையாட்டுகளில் திறமை இருந்தும் முன்னேற முடியாத நிலை உள்ளது. இந்த குறையை போக்கும்விதமாக,  கிளப் நிர்வாகிகள் குழு அதன் தலைவர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி, விளையாட்டு மேம்பாட்டு குழு சேர்மன் ராம் சந்தானம் ஆகியோரை நிறுவனர்களாக கொண்டு  ஸ்போர்ட்ஸ் டிரஸ்டை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த டிரஸ்டின் சார்பில் முதற்கட்டமாக டேபிள்டென்னிஸ் விளையாட்டுக்கான பயிற்சி மைலாப்nullரில் உள்ள கோகலே ஹாலில் வருகிற 17ம் தேதி முதல் துவங்கப்படுகிறது. முதலில் 24 வீரர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தேசிய, சர்வதேச வீரர்கள் உருவாகக்கூடும் என ஏ.கே.ஜி. டேபிள் டென்னிஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ரீனிவாசராவ் கூறினார்.

டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இந்த விளையாட்டை மேலும் நிறைய பேர் விளையாடும் வகையில் பல பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விளையாட்டுக்கான டேபிள்களை இலவசமாக வழங்க இருப்பதாக  ஸ்போர்ட்ஸ் டிரஸ்டின் அறங்காவலர்களில் ஒருவரான வி.எம்.ராமலிங்கம் கூறினார். இதற்காக முதற்கட்டமாக 75 பள்ளி, கல்லூரிகளுக்கு டேபிள்கள் வழங்க இருப்பதாக கூறிய ராமலிங்கம், தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை விரிவு படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதே போல் செஸ் விளையாட்டை ஊக்குவிப்பதற்கும் டிரஸ்டின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்வதேச செஸ் வீரரான சி.ஜி.எஸ்.நாராயணனின் மேற்பார்வையில் பிராப்ளம் சால்விங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து சர்வதேச பிராப்ளம் சால்விங் வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியும் என்று கூறினார் நாராயணன்.

விளையாட்டு தொடர்பான தகவல்களை உடனுக்குடன், துல்லியமாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ளும் பொருட்டு, விளையாட்டு நூலகம் ஒன்று புதிதாக துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து ஸ்போர்ட்ஸ் டிரஸ்டின் அறங்காவலர்களில் ஒருவரான என்.சி.சரபேஸ்வரன் கூறுகையில், சென்னையில் விளையாட்டுக்கென்று பிரத்யேகமாக துவங்கப்படும் முதல் நூலகமான இதில், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதிகளுடன் பல்வேறு தரப்பட்ட நூல்களும் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் வீரர், வீராங்கனைகள் தங்களது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ளலாம் என்றார்.

டேபிள் டென்னிஸ் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள், செஸ் விளையாட்டு பிராப்ளம் சால்விங் திட்டங்கள், விளையாட்டு நூலகம் ஆகிய அனைத்து பணிகளும் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரரும், தமிழக அணியின் முன்னாள் கேப்டனுமான எஸ்.வாசுதேவன் மேற்பார்வையில் நடைபெறும். இந்த புதிய திட்டங்களோடு துவங்கும்  ஸ்போர்ட்ஸ் டிரஸ்டின் துவக்க விழா வருகிற 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு கிளப் வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கிளப்பின் தலைவர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி, கிளப்பின் விளையாட்டு மேம்பாட்டு குழு சேர்மன் ராம் சந்தானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago