முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டத்தொடர் பிப்.4 வரை சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன. - 31 -  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ரோசய்யா உரையுடன் நேற்று காலை தொடங்கியது. கவர்னர் உரைக்கு பிறகு பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில்  தமிழக சட்டமன்ற அலுவலர் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:   வருகிற 4​ந் தேதி வரை இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது. நாளைய கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களை டி.என்.வடிவேல், வி.இரா.கிருஷ்ணசாமி, செ.தாமோதரன், ஆ.மு. ராமசாமி, வி.வேதையன், பி.எஸ்.மணியன், கோ. மோகனதாசன் ஆகியோர் இரங்கல் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதை தொடர்ந்து 2011 ​12​ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான முதல்​துணை நிதிநிலை அறிக்கை சட்ட சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும்.   பிப்ரவரி 1 மற்றும் 2​ந் தேதிகளில் காலை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். 3​ந் தேதி துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கை மீது விவாத மின்றி வாக்கெடுப்பு நடை பெறும். துணை நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்து ஆய்வு செய்து விவாதமின்றி நிறைவேற்றப்படும். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.   4​ந் தேதி (சனிக்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், முதல்​ அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரையும் இடம் பெறுகிறது. இதையடுத்து மசோ தாக்கள் ஏதாவது இருந்தால் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும். சட்ட மன்றம் தினசரி காலை 10 மணிக்கு தொடங்கும். கேள்வி நேரம் இடம் பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago