முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகத் தயார்-தோனி

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, பிப். - 1 - இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக் கான கேப்டன் பதவியல் இருந்து விலகத் தயார் என்று கேப்டன் தோனி அறிவித்து இருக்கிறார்.  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0 - 4 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து இந்திய அணி மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா வின் முக்கிய நகரமான சிட்னியில் நிருபர்களைச் சந்தித்த கேப்டன் தோனி அவர்களுக்கு அளித்த பேட்டியின் போது மேற்கண்வாறு தெரிவித்து இருக்கிறார்.  இந்திய அணி வெளிநாட்டுத் தொடர்களில் சமீப காலமாக டெஸ்ட் தொடரை இழந்து வருகிறது. இதற்கு ஐ.பி.எல் போட்டியே முக்கிய காரணம் என்று முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி குற்றம் சாட்டி இருந்தார்.  இந்திய அணி முன்னதாக இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை 0 - 4 என்ற கணக்கில் இழந்தது. தற் போது ஆஸி. க்கு  எதிரான டெஸ்ட் தொடரை 0 - 4 என்ற கணக்கில் கோட்டை விட்டது.  இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக தோனி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அந்தப் பெயர் தற்போது ரிப்பேர் ஆகி வருகிறது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து கேப்டன் பதவியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. 

டெஸ்ட் போட்டிகான இந்திய அணிக்கு தோனியை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக துவக்க வீரரும், மூத்த வீரர்களில் ஒருவருமான சேவாக்கை கேப்டனாக நியமிப்பது குறித்தும் பி.சி.சி.ஐ. பரிசீலித்து வருவதாக தெரிய வருகிறது. 

இந்நிலையில் சிட்னியில் நிருபர்களைச் சந்தித்த கேப்டன் தோனியிடம் இந்திய அணியின் நிலை மற்றும் கேப்டன் பதவி குறித்து அடுக்கடுக்கான கேள்விகலைக் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு - 

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். இந்தப் பதவிக்கு பொறுத்தமானவரை தேர்வு செய்ய வேண்டும். 

இந்திய அணியின் கேப்டன் பதவி என்பது யாருக்கும் சொந்தமானது அல்ல. தகுதியானவர் இந்திய அணிக்கு தலைமை தாங்கலாம். பி.சி.சி. ஐ. தான் இதனை முடிவு செய்ய வேண்டும். 

அடுத்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற விரும்புகிறேன். நான் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, முடிந்தவரை அணியின் வெற்றிக்காக பாடுபட்டேன் இவ்வாறு அவர் கூறினார். 

சேவாக் ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமை தாங்கி ஆடி வந்தார். இதில் அவரது கேப்டன்ஷிப் குறித்து பி.சி.சி.ஐ. க்கு திருப்தி இல்லை என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சேவாக்கை விட தோனி திறமையானவர். எனவே அவரையே தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தொலைக் காட்சி வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் தெரிவித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago