முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள இ.கம்யூ. மாநாடு: அச்சுதானந்தனுக்கு கண்டனம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,பிப்.9 - கேரள மாநில இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கேரள மாநில இடது கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் மாநில முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தனின் செயல்பாடுகளுக்கு மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களாக கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைக்கு மாறாக நடந்து வருவதாக அச்சுதானந்தன் மீது கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டது. மாநிலத்தில் கட்சி நிலைமை குறித்து அமைப்பு ரீதியான மறுஆய்வு அறிக்கையை மாநில செயலாளர் பினராய் விஜயன் மாநாட்டின் முதல் நாள் தாக்கல் செய்தார். அதில் அச்சுதானந்தன் மீது கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் தலைவர்களான அச்சுதானந்தனும் பினராய் விஜயனும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகிறார்கள். அச்சுதானந்தன் தலைமையில் நடந்த ஆட்சி குறித்து அறிக்கையில் திருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான பினராய் விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியபோது விரோத போக்கை கையாண்டதற்கு அச்சுதானந்தனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநாட்டை இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கேரள மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் மற்றும் முக்கிய தலைவர்கள் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்