முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் தலிபான் மீது தாக்குதல்: 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பான்னு, ஜூன்.20 - பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த மாகாணத்திலிருந்து 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான வஜிரிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அதிகமாக உள்ளனர். இங்கிருந்து தான் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் தற்கொலை படை தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆப்கனில் உள்ள அமெரிக்க படைகள் அவ்வப்போது ஆளில்லா விமானம் மூலம் தலிபான் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து கடும் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தியதில், 10 தீவிரவாதிகள் உட்பட 39 பேர் பலியானார்கள், இதைத் தொடர்ந்து, வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தலி தலிபான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100 தீவிரவாதிகள் பலியானார்கள், வஜிரிஸ்தான் மாகாணத்தில் தலிபான்கள் மீதான தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், அந்த மாகாணத்திலிருந்து 30 ஆயிரம் மக்கள் வெளியேறி, கைபர்-பக்துன்கா மாகாணத்திற்கு சென்றுள்ளனர். வஜிரிஸ்தானிலிருந்து தொடர்ந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்