முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லாந்தில் மனைவியை தூக்கி ஓடும் போட்டி!

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

ஹெல்சிங்கி, ஜூலை 8 - மனைவியை தோளில் சுமந்து கொண்டு ஓடும் போட்டி பின்லாந்து நாட்டில் நடந்தது. பல்வேறு நாட்டை சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பின்லாந்து தம்பதி சாம்பியன் பட்டத்தை வென்றது.

பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கியை அடுத்துள்ள சோன்காஜார்வியில் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓடும் போட்டி நடைபெற்றது. 19வது ஆண்டாக நடந்த இந்த சர்வதேச சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தய போட்டியில் ஆஸ்திரேலியா, பின்லாந்து, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 36 ஜோடிகள் கலந்து கொண்டன.

போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் 17 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவர்களது எடை 49 கிலோவுக்கு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விதிகள் விதிக்கப்பட்டன. பல்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதியர்கள், தங்களது மனைவிகளை தோளில் சுமந்து கொண்டும் இரு கைகளால் தாங்கி கொண்டும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பின்லாந்தை சேர்ந்த வில்லி பார்வியான்னன் மற்றும் ஜானட்ஓக்மான் ஜோடி 253 மீட்டர் தூரத்தை 63 நிமிடத்தில் கடந்து முதலிடத்தை பிடித்தது. இவர்களுக்கு அடுத்து பிரிட்டனை சேர்ந்த ரிச்பிளாக்கி ஸ்மித் மற்றும் அன்னா மார்க்ரெட் ஸ்மித் தம்பதி 2ம் இடத்தை பிடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்