முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: தயாநிதி மாறன் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.29 - ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்க முடியாது என முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்ந்த மனுவை விசாரித்து சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு அளிப்பதற்கு முன்னதாக நேற்றுக்காலை ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, தன் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்கக் கோரி, முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.

நீதிபதி எச்.எல்.தத் தலைமையிலான சுப்ரீம்கோர்ட்டு அமர்வு முன் இந்த மனு நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவதை தடுக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்.

இந்த வழக்கில் சிபிஐ இன்னும் விசாரணையை முழுமையாக முடிக்கவில்லை. விசாரணை நிறைவு பெறாத நிலையில், தன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என தயாநிதி மாறன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந் நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் சுப்ரீம்கோர்ட்டில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில்:-மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சிபிஐ-யின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சிபிஐ இயக்குநர் அதனை ஏற்க மறுத்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவிடாமல் தடுத்து வருகிறார் என குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனு செப்.2-ல் விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்