முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ.மார்ச். - 3 - உத்தர பிரதேசத்தில் இன்று இறுதிக்கட்டமாக 60  தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு  தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே  6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள வேளையில் இன்று 7 வது கட்ட  இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.  பரேலி, மொராடாபாத், பிஜ்னூர், பதாவூன், ராம்பூர் உள்ளிட்ட  10 மாவட்டங்களில் இந்த இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களை போல இந்த இறுதிக்கட்ட தேர்தலையும் அமைதியாக நடத்துவதற்கு தேவையான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.  இதற்காக 1.5 லட்சம்  போலீசாரும்  772 கம்பெனிகள் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று வாக்கெடுப்பு நடக்கும் போது பாதுகாப்பு கண்காணிப்பிற்காக இரு ஹெலிகாப்டர்கள் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் நேபாளத்தை ஒட்டியுள்ள சர்வதேச எல்லை பகுதியிலும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப்பகுதியிலும் பறந்து கண்காணிப்புகளை மேற்கொள்ளும்.  பதட்டம் நிறைந்த பகுதிகளில் பறக்கும் படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இன்று 60 தொகுதிகளுக்கு நடக்கும் இறுதிக்கட்ட  தேர்தலில்  962  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 100 பேர் பெண்கள், மொத்தம் 1 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க உள்ளனர். இந்த இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்ததும் வருகிற 6 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்போது  உ.பி.யில்  எந்த கட்சி ஆட்சி  அமைக்கும் என்பது  தெரிந்துவிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்