முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: லண்டனில் தெரசா மே அரசு தப்பியது

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக பிரக்சிட் எனப்படும் முடிவுக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2016-ல் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பிற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்ய பிரதமர் தெரசா மே கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் பார்லிமென்ட்டில் வரைவு உடன்படிக்கையை தாக்கல் செய்தார். பிரி்ட்டன் பாராளுமன்றத்தில் பிரக்சிட் வரைவு உடன்படிக்கை மீது ஓட்டெடுப்பு நடந்தது. பாராளுமன்ற கீழ் சபையில் 432 பேர் எதிராகவும், , 202 பேர் ஆதரவகாவும் ஓட்டளித்தனர். இதனால் பிரக்சிட் முடிவு தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து கீழ்சபை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி. ஜெர்மி கோர்பைன் தெரசா மே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீது ஓட்டெடுப்பு நடந்தது. இதில் எதிராக 302 எம்.பி.க்களும், ஆதரவாக 324 எம்.பி.க்களும் ஒட்டளித்தனர். இதனால் தெரசா மே அரசு தப்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து