எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் இலங்கை கடற்படை விரட்டியதால் ஏற்பட்ட விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் திரு.க.முனியசாமியின் குடும்பத்தினருக்கு, இளந்தைக்கூட்டம் கிராமத்திலுள்ள அவர்களது வீட்டிற்கு நேரடியாக சென்று முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உடனிருந்தார். இதன்பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து 12.01.2019 அன்று ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த 9 மீனவர்கள் இரு படகுகளில் அவர்களது பாரம்பரிய மீன்பிடிப்பகுதியான பாக் வளைகுடா பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். 13.01.2019 அன்று அதிகாலையில் அவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினர் விரட்டியதில் இரு படகுகளும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஆனால்; கருப்பையா என்பவரது மகன் க.முனியசாமி என்பவர் துரதிஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். அதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் க.முனியசாமியின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார்கள். இந்நிலையில், உயிரிழந்த க.முனியசாமியின் உடல் கொழும்பிலிருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, திருச்சியிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் வாகனத்தில் அவரது சொந்த ஊரான இளந்தைக்கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த மீனவர் க.முனியசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி பலியான மீனவரின் மகள் மு.சண்முகப்பிரியா என்பவரிடத்தில் நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதுதவிர, மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் நல வாரியம் மூலமாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மீனவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விதமாக, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு மத்திய அரசின் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மீன்வளத்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.