முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மாலையணிவித்து மரியாதை

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை, -மதுரை மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில்  வீர வணக்கநாளை முன்னிட்டு தமுக்கம் மைதானம் முன்பு உள்ள தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 மதுரை தமுக்கம் மைதானம் முன்பு  தமிழன்னை சிலை உள்ளது. இந்த சிலையை 10-01-1981ம் ஆண்டு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை  எம்.ஜி.ஆர். நடத்திய போது மாநாட்டின் நிறைவுநாளையொட்டி தமுக்கம் மைதானம் வாயிலில் தமிழன்னை சிலையை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியும் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த சிலைக்கு அ.தி.மு.க.மாணவர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வந்தது.
 வீர வணக்க நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட  அ.தி.மு.க.மாணவர் அணி சார்பில் மாவட்ட மாணவர் அணிச்செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் மாவட்ட  அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனையொட்டி மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட  துணைச்செயலாளர் சி.தங்கம், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாநிலஎம்.ஜி.ஆர்.இளைஞரணி இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மேயர் கு.திரவியம், மதுரை புறநகர் மாவட்ட இளைஞர்அணிச்செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர்கள் தளபதி மாரியப்பன், கே.ஜெயவேல், அண்ணாநகர் எம்.என்.முருகன், எம்.எஸ்.செந்தில்குமார், பி.எஸ்.கண்ணன், பைக்கரா கருப்பசாமி, செ.பூமிபாலகன், திருப்பாலை ஜீவானந்தம், வண்டியூர் முருகன், எஸ்.முனியாண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார் பாண்டி கே.முருகேசன், ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன், முத்துக்குமார், முத்துராமலிங்கம், செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, மாவட்ட இளைஞர்பாசறை செயலாளர் அரவிந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் மாணிக்கம், மற்றும் புதூர் அபுதாகீர், கலைச்செல்வன், கே.கே.நகர் ஆர்.மணி, புதூர் மோகன், பெரியசெல்வம், சித்தன், முனிச்சாலை சரவணன், ஒத்தக்கடை மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து