முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுராஷ்ட்ரா அணியை வீழ்த்தி ரஞ்சி கோப்பையை 2-வது முறை கைப்பற்றி ' விதர்பா ' சாதனை

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர் : ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டுக்கான இறுதிப் போட்டியில் விதர்பா அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது முறையாக, கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆனது.

பேட்டிங் தேர்வு...

ரஞ்சி கோப்பைக்கான இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் விதர்பாவும் சவுராஷ்ட்ரா அணியும் மோதின. நாக்பூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன் எடுத்தது. அதிகப்பட்சமாக அக்‌ஷய் கர்னேஸ்வர் 73 ரன்களும் அக்‌ஷய் வாட்கர் 45 ரன்களும் எடுத்தனர்.

சவுராஷ்ட்ரா தரப்பில் அந்த அணியின் கேப்டன் உனட்கன்ட் 3 விக்கெட்டும், சகாரியா, மக்வானா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஜடேஜா அபாரம்...

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய சவுராஷ்ட்ரா அணி, 307 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஸ்நெல் படேல் 102 ரன்னும் உனட்கட் 46 ரன்னும் எடுத்தனர். விதர்பா சார்பில் சர்வாடே 5 விக்கெட்டும் அக்‌ஷய் வாக்கரே 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா அணி, 200 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. சவுராஷ்ட்ரா சார்பில் சுழல் பந்துவீச்சாளர் தர்மேந்திர ஜடேஜா 6 விக்கெட் வீழ்த்தினார். 

ஆட்ட நாயகன்...

206 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி தடுமாறியது. 58.4 ஓவர்களில் 127 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து, தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகப்பட்சமாக விஸ்வராஜ் ஜடேஜா மட்டும் 52 ரன் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. விதர்பா அணி சார்பில், ஆதித்யா சர்வாடே 6 விக்கெட்டும் வாக்கரே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆதித்யா சர்வாடே, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றியுள்ளது விதர்பா அணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து