முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச்.26 தமிழக அரசின் பட்ஜெட் நிதிஅமைச்சர் ஒ.பி.எஸ். தாக்கல் செய்கிறார்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 19 - தமிழக பட்ஜெட் வரும் மார்ச்.26-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2012-2013-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த  புதிய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள், அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விபரம் வருமாறு:- விடுமுறை நாளான நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை அன்றும்) முதலமைச்சர் ஜெயலலிதா துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார்.நேற்று முதலமைச்சர் ஙீஜெயலலிதா பல்வேறு துறைகள் சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 1 மாதம் நடைபெறும்.கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்தினார்.கவர்னர் உரையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வறுமையை போக்க ஒருங்கிணைந்த திட்டம், 2-ம் பசுமை புரட்சி, மின் உற்பத்தி திட்டங்கள்,மோனோ ரெயில் திட்டம், புதிய பேருந்துகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலைகள், சூரிய மின்சக்தி வசதியுடன் ஆண்டுக்கு 60 ஆயிரம் பசுமை  வீடுகள் கட்டும் திட்டம் உட்பட ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கவர்னர் உரை மீது பிப்ரவரி 4 -ந்தேதி வரை விவாதம் நடைபெற்றது.அன்னைய தினம் முதலமைச்சர் ஜெயலலிதா விரிவான பதில் அளித்தார்.அனைவரும் அசந்து போகும் அளவுக்கு முதல்வர் அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.தானே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள், திட்டங்களை அவர்களது மனம் குளிரும்படி, மகிழ்ச்சி அடையும் வகையில் வெளியிட்டார்.அந்த மாவட்டங்களுக்கு 790 கோடி ரூபாய் அளவுக்கு சிறப்பு தொகுப்பு திட்டங்களை அறிவித்தார். முந்திரி, பலா,மா,போன்ற பயிர்களுக்கு 5 ஆண்டு வரை பராமரிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்தார். 1 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். மின்பற்றாக்குறைக்கு கடந்த தி.மு.க.ஆட்சியே காரணம் என புள்ளி விவரங்களுடன் விளக்கிய முதலமைச்சர் வரும் ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்வெட்டு குறையும் என்றும் அறிவித்தார். இதனை அடுத்து பட்ஜெட் தயாரிப்பு பணியில் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டார். ஒவ்வொரு துறை வாரியாக முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு கூட்டங்களை நடத்தினார்.இதுவரை நடந்துள்ள பணிகள் என்ன? இனி செய்ய வேண்டிய பணிகள் என்ன?புதிய திட்டங்கள், சலுகைகள் என அனைத்தையும் விரிவாக முதலமைச்சர் ஆராய்ந்தார். ஞாயிற்றுக்கிழமை தலைமை செயலகத்துக்கு முதலமைச்சர் வந்து இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.அனைத்து புள்ளி விவரங்களையும் விரல்நுணியில் வைத்திருந்து அதிகாரிகளுடன் கேள்வி கேட்டார்.முதலமைச்சரின் நிர்வாக திறன், நினைவாற்றல்,தொலைநோக்கு பார்வையுடன் சொல்லிய திட்டங்கள், ஏழை, எளிய மக்கள் நிலைமைகளை புரிந்து செய்ய  வேண்டிய காரியங்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கள்,ஆலோசனைகள்.முடிவுகள் கேட்டு ஒவ்வொரு அதிகாரியும் அசந்து விட்டனர். வியப்படைந்தனர். இப்படிப் பட்ட முதலமைச்சரின் கீழ் பணியாற்று வதை அதிகாரிகள் பெருமையாக நினைக்கிறார்கள்.
ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து நிதானித்து முதலமைச்சர் ஜெயலலிதா பட்ஜெட்டை தயாரிக்க உதவியுள்ளார்.
2012-2013-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் வரும் 26-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.26-ந் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்தபின், அன்று அலுவல் ஆய்வு குழு  கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது? எந்தெந்த மானிய கோரிக்கை மீது எத்தனைநாள் விவாதம் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
27-ந் தேதி முதல் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்துக்குப் பின் இறுதியாக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். அநேகமாக 30-ந் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் இருக்கும். அன்றைய தினம் ஒ.பன்னீர் செல்வம் பதில் அளிப்பார் என்று தெரிகிறது.
ஏப்ரல் 2-ந் தேதி முதல் தொடர்ந்து ஒவ்வொரு மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். இறுதியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று சபை அனுமதி அளிக்கும்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் அநேகமாக 1 மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago