முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் சென்னையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம், நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற தேர்தல் குறித்த பணிகள் மற்றும் வியூகம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.  இதைத்தொடர்ந்து பார்லி. தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

20 தொகுதிகளில்...

பாராளுமன்றத்திற்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. பாராளுமன்றத்தேர்தலில் அ.தி.மு.க, பா.ம.க பா.ஜ, தே.மு.தி.க., புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.வுக்கு 5 எம்.பி தொகுதிகளும் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் த.மா.கா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

செயலர்கள் கூட்டம்...

விரைவில் பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க  மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தேர்தல் பணிகள் மற்றும் அனைத்து தொகுதிகளிலும் மகத்தான வெற்றி காண தேர்தல் வியூகம், பிரச்-சார அணுகுமுறை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த நாளை காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டியிருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து