முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூத் அசாரை விடுவிக்க ஒப்புதல் அளித்தது யார் ?: அமித்ஷா விளக்கம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கந்தகார் விமான கடத்தலின் போது பயங்கரவாதி மசூத் அசாரை விடுவிக்க சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தான் ஒப்புதல் தெரிவித்தனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

கந்தகார் விமான கடத்தலின் போது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவன் மசூத் அசாரை பா.ஜ.க. அரசு விடுவித்ததாலேயே இப்போது புல்வாமா தாக்குதல் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் இது குறித்து அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

அமித்ஷா தனது வலைதள பக்கத்தில் எழுதி உள்ள கட்டுரையில்,

கந்தகர் விமானம் கடத்தப்பட்ட உடன் பிரதமர் வாஜ்பாய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விமானத்தில் பயணித்த பயணிகளின் உயிர் முக்கியம் என்ற ஒருமித்த கருத்துக்களை தெரிவித்தன. மசூத் அசாரை விடுவித்து, கடத்தப்பட்ட பயணிகளை மீட்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டன. இது சரியான முடிவு இல்லை தான். ஆனால் வேறு வழி இல்லாததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிணை கைதிகளை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. துரதிஷ்டவசமாக, மசூத் அசாரை பா.ஜ.க. அரசு விடுவித்தது ஏன் என கேள்வி எழுப்பி மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். 2010-ல் காங்கிரஸ் 2-வது முறையாக ஆட்சியில் இருந்த போது 25 கொடூரமான பயங்கரவாதிகளை விடுதலை செய்தது ஏன் என காங்கிரஸ் தலைவர்கள் நாட்டிற்கு சொல்லலாமே.

அவர்களில் ஒருவன் தான் பதன்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான ஷாகித் லதிப். கந்தகார் கடத்தலை தேர்தல் பிரசாரத்தில் பிரச்னையாக கிளப்ப ராகுல் விருப்பினால், கடத்தப்பட்ட மத்திய அமைச்சர் முப்தி முகம்மது சையத்தின் மகள் ருபையா சையதை மீட்க 10 பயங்கரவாதிகளை விடுவித்ததையும் பேசட்டும். இவ்வாறு அமித்ஷா அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து