முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபாச படங்களை நீக்க புதிய தொழில்நுட்பம் - பேஸ்புக் நிறுவனம் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

சான்பிரான்சிஸ்கோ : ஆபாச படங்களை நீக்க ஏ.ஐ. என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது ஆபாச படங்கள், தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவற்றையெல்லாம் அந்த சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக ஏ.ஐ. என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் உலக பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஆன்டிகான் டேவிஸ் கூறியதாவது:-

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் சம்பந்தப்பட்டவர்களின் எந்தவித அனுமதியும் இன்றி ஆபாச படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றை நீக்குவதற்கு புதிய தொழில் நுட்பங்கள் உதவும்.

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எங்கள் வலை தளத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிற ஆபாச படங்கள், வீடியோக்கள் பற்றி புகார்கள் வருமுன்னரே மனித மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அனுப்பப்படும். யாரோ சிலரின் நெருக்கமான காட்சிகளை கொண்ட படங்களை வெளியிடுகிற போது அது பேராபத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே அவற்றை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீக்குவோம். முதலில் இதை சோதனை ரீதியில் பயன்படுத்தி விட்டு, பின்னர் நெருக்கடி நேரத்தில் பயன்படுத்த தக்கதாக விரிவுபடுத்துவோம் என்று அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து