முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் 7 இந்தியர்கள் பலியானதாக தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலியானவர்களில் 7 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் 9 இந்தியர்கள் காணவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய தூதரகம் அவர்களைக் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு நியூசிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருடனும் ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் பட்டியலில் குறைந்தது 7 இந்தியர்கள் இருக்கலாம் என தூதரக அதிகாரிகள் கருதுகின்றனர். இவர்கள் மசூதிக்குச் செல்லும் முன்பு, தங்கள் குடும்பத்தினரிடம் பேசியதாகவும் பின்னர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த 31 வயதான பஹராஜ் ஹசன் என்பவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தெலுங்கானா கரீம் நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான் என்பவரும் உயிரிழந்து விட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரிப் வோரா மற்றும் அவரது மகன் ரமீஸ் வேரா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹபீஸ் முசா படேல், நவஸ்ரீயை சேர்ந்த மற்றொரு வம்சாவளி இந்தியர் ஆகிய நான்கு பேர் உயிரிழந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதே போன்று கேரள மாநிலம் கொடுங்கலூர் பகுதியைச் சேர்ந்த ஆன்சி அலி பாவா என்ற 27 வயதான இளம் பெண்ணும் மசூதியில் தமது கணவருடன் தொழுகை நடத்தச் சென்ற போது உயிரிழந்தார். ஆயினும் அவர் கணவர் உயிர் தப்பி விட்டார் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து