முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு பாதகங்கள் நிச்சயம்: பசில் ராஜபக்சே

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு, மார்ச்.26 - ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இந்தியாவுக்குத்தான் பாதக விளைவுகள் ஏற்படும் என்று ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இந்தியா வாக்களித்ததை இலங்கையால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில் ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்சே கூறுகையில், 

ஜெனிவா தீர்மான முடிவுகள் இந்தியாவின் பிராந்திய தலைமையகத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் பெரும்பான்மையானவை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தன. இந்தியா, அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்தது எனினும், மாலத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தன. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. இதன்படி பிராந்தியத்தின் தலைமைத்துவ பதவிக்கான தகுதியை இந்தியா இழந்து வருகிறது என்று பசில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்