முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 2ஆயிரம் மாற்றுக்கட்சியினர்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2019      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, - திமுக, காங்கிரஸ், அமமுக கட்சியை சேர்ந்த 2ஆயிரம் பேர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர். 
 விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சிவகாசியில் நேற்று திமுக, காங்கிரஸ், அமமுக கட்சியை சேர்ந்த  2ஆயிரம் பேர் அக்கட்சிகளிலிருந்து விலகி விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சிவகாசி காங்கிரஸ்  நகர செயலாளர் தங்கதுரை, அமைப்பு சாரா நகர தலைவர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெகநாதன், தனலட்சுமிவைரமுத்து, 10வது வார்டு பொறுப்பாளர்கள் இன்பராஜ், கதிரேசன், மணிகண்டன், மகளிர் அணி சத்யபாமா, மாவட்ட மாணவர் காங்கிரஸ் சுரேஸ், மணி, மனோஜ், கோடிஸ்வரன், செல்வகணேஷ், மாதேஸ்வரன், சத்யா திமுக முன்னாள் கவுன்சிலர் பொன்னுத்தாய், பொறுப்பாளர் வினோத்பிரபு,  அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய மகளிர் அணி தலைவி  வைரம்ராஜேஸ்வரி,பாண்டியராஜன் உட்பட 2ஆயிரம் பேர் அக்கட்சிகளிலிருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதே போன்று சாத்தூர் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் மது தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையேற்று பணியாற்றிட மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்துள்ள அனைவரையும் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக வருக, வருக என வரவேற்கின்றேன். மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்துள்ள அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமையும். அதிமுகவிற்கு நம்பி வந்தவர்கள் கெட்டுப்போன வரலாறு கிடையாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையேற்று அனைவரும் களப்பணியாற்றுங்கள். சாத்தூர் சட்ட மன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்  கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் எம்பி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி இருவரையும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வைக்கும் வகையில் அனைவரும் செயலாற்ற வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் திருத்தங்கல் அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சீனிவாசன்,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து