முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விவகாரங்களில் இந்தியா பங்காற்ற வேண்டுகோள்

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ஐ.நா., ஏப்.26 - சர்வதேச விவகாரங்களில் இந்தியா மகத்தான பங்காற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த வருகைக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சர்வதேச விவகாரங்களில் இந்தியா மாபெரும் பங்களிப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக அரபு நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டுவர இந்தியா ஒரு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவுடன் வலுவான நட்புறவை கொண்டுவரும் நோக்கத்தில்தான் தான் இந்தியாவுக்கு செல்ல இருப்பதாக அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பலமான பங்களிப்பு நாடாகவும், தகுதி வாய்ந்த நாடாகவும் இந்தியா இருக்கிறது. எனவே இந்தியாவின் பங்களிப்பு ஐ.நா.வுக்கு அவசியமாக உள்ளது என்றும் அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியா உலக விவகாரங்களில் மகத்தான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அரபு நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை சீர்குலைந்துள்ளது. அங்கு ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.  வடக்கு ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது. இந்த நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உதவிசெய்ய இந்தியா முன்வர வேண்டும். ஜனநாயகத்தில் தனக்குள்ள அனுபவங்களை இந்த நாடுகளுடன் இந்தியா பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் ஐ.நா.வுக்கும் இடையை உள்ள பங்குப்பணிகள் தற்போது மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால் இந்த பங்குப்பணிகள் மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. விரும்புகிறது. அதற்காகத்தான் நான் இந்த இந்தியப் பயணத்தையே மேற்கொள்ள இருக்கிறேன். 

பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றுவரும் இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்