முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க 6 மாதங்களுக்குள் ஓப்பந்தம் போட வேண்டும் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்கும் வகையில் 6 மாதத்திற்குள் ஒப்பந்தம் போட வேண்டும் எனறு தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மெட்ரிகுலேசன் பள்ளிகள், நர்சரி பிரைமரிப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்று பல்வேறு வகையான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் போதிய கல்வித் தகுதி இன்றி பணியில் அமர்த்தப்படுகின்றனர் என்றும், நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கையையும் அவர்கள் வைத்து வந்தனர்.

அதே நேரத்தில் தனியார் பள்ளியை நடத்தும் நிர்வாகத்தினர் தங்களின் நலன் கருதி ஆசிரியர்களுக்கு போதுமான சம்பளத்தினை வழங்காமல் இருந்து வந்தனர். இதனால் சில தனியார் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் பணியில் இல்லாமல் இருக்கின்றனர்..இந்நிலையில் 2018-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தில், பணியாளரின் பணியமர்த்துதல், அவர்களின் பணி வரையறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 2018-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு தனியார் பள்ளி ஒன்றின் பள்ளிக்குழு அந்தப் பள்ளி திறம்பட செயல்படுவதற்கு தேவையானவை எனக் கருதும் பணியாளரை பணியில் அமர்த்தலாம். தனியார் பள்ளியின் பணியாளரின் தகுதிகள் மற்றும் எண்ணிக்கை அரசால் நிர்ணயிக்கும் முறையில் இருத்தல் வேண்டும்.

2009-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலித்தலை ஒழுங்குமுறைப் படுத்துதல் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவிற்கு அத்தகைய பள்ளியால் சமர்ப்பிக்கப்பட்ட பணியாளரின் சம்பளம் மற்றும் பிற படிகள் குறித்த செலவின விவர அறிக்கையில் உண்மையாக காட்டப்படுதல் வேண்டும். தனியார் பள்ளி ஒவ்வொன்றின் பணியாளரின் சம்பளம் மற்றும் படிகள் ஒவ்வொரு மாதத்தின் குறிப்பிட்ட தேதியன்று அல்லது தேதிக்கு முன்பு செலுத்தப்படுதல் வேண்டும். தனியார் பள்ளி ஒவ்வொன்றும் வரையறைகளுடன் அதனுடைய பணியாளருடன் ஒப்பந்தமொன்றும் செய்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தச் சட்டம் தொடங்கும் தேதியன்று ஏற்கனவே பணியிலுள்ள பணியாளருடன் பணி ஒப்பந்தம் எதனையும் செய்து கொள்ளாமல் இருந்தால், அத்தகைய பணி ஒப்பந்தம் இந்தச் சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து 6 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படுதல் வேண்டும். அரசு நிர்ணயம் செய்யும் கல்வித் தகுதிக்கு குறைந்தபட்ச தகுதிகளை கொண்டவர்களை தனியார் பள்ளி எதிலும் பணியமர்த்தம் செய்யப்பட கூடாது.

பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர் அல்லது நபர் இந்தச் சட்டத்தின் படி இந்தச் சட்டத்தினால்அல்லது அதன் விதிகளால் அல்லது தற்போதைக்குச் செயல்பாட்டில் உள்ள சட்டம் எதன்படியும் அதற்கு அல்லது அவரிடம் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் எதனையும் செயல்படுத்தும் வகையில் தனியார் பள்ளி எதற்குள்ளும் நுழைவதிலிருந்து வேண்டுமென்றே தடுக்கும் நபர் எவரும் மூன்று மாதங்கள் காலத்திற்கான சிறை தண்டனையுடன் அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை பணத்தண்டத்துடன் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுதல் வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து