முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் சரியாகநடவடிக்கை எடுக்கவில்லை

செவ்வாய்க்கிழமை, 8 மே 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மே.- 8 - தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா, அமெரிக்காவை காட்டிலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் கிலாரி கிளிண்டன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். வங்கதேசதம், இந்தியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன் நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எடுத்த நடவடிக்கைகளை காட்டிலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் கடுமையாக போராட வேண்டும் என்று கிளிண்டன் கேட்டுக்கொண்டார். தீவிரவாதத்தால் இந்தியா, அமெரிக்காவில் பலியான மக்களைக்காட்சிலும் பாகிஸ்தானில் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானில் 30 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். அதனால் பாகிஸ்தான் தன் நலன் கருதி தீவிரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கிளிண்டன் ஆலோசனை கூறினார். அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை அடியோடு ஒழிக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த விஷயத்தில் பல முன்னேற்றமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். அது நல்ல பலனை அளித்துள்ளது. மும்பை தாக்குதல் குறித்து குறிப்பிட்ட கிளிண்டன், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவன் ஹிபிஜ் சய்யீது தலைக்கு நாங்கள் 10 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம் என்றார். பின்லேடனை கொன்றுவிட்டீர்கள். அடுத்த பெரிய நடவடிக்கை என்ன என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கிளிண்டன், தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா,அமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கை அளவுக்கு பாகிஸ்தான் எடுக்கவில்லை. தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் விரைந்து கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்