முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில் கொலை நோக்குடன் தங்கியிருந்த கூலிப் படையினர் 9 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2019      தேனி
Image Unavailable

போடி,-  போடியில்  கொலை செய்யும் நோக்குடன் தனியார் விடுதியில் தங்கியிருந்த கூலிப் படையினர் 9 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
     போடி நகரில் வெளியூரை சேர்ந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் போடி நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனையிட்டனர். அப்போது ஒரு விடுதியில் வெளியூரை சேர்ந்த 9 பேர் தங்கியிருந்தது தெரிந்தது.
     அவர்களை விசாரித்ததில் இவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த அன்பரசன் (24), மண்டலமாணிக்கம் என்ற ஊரை சேர்ந்த முனியசாமி (21), கமுதியை சேர்ந்த அய்யனார் (30), திருமுருகன் (21), ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜோசப் பாஸ்டின் குமார் (20), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பாஸ்கரன் (47), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த யோகேஷ் (20), தினேஷ் (22), கார்த்திக் (20) என்பது தெரிந்தது.
      இவர்கள் தங்கியிருந்த அறையில் நீண்ட பட்டாக்கத்திகள், நீளமான அரிவாள்கள், இரும்பு கம்பிகள், இரும்பு ராடுகள் ஆகியவை இருந்துள்ளது. இவர்களிடம் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறியது: மலேசியாவை சேர்ந்த விக்னேஷ்வரி (45) என்பவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் (25) என்ற இளைஞரை முகநூல் மூலம் காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்ய வலியுறுத்தியபோது அசோக்குமார் மறுத்து விட்டதாகவும், இதனால் அமுதேஸ்வரி, கவிதா என்ற பெயர்களில் போலியாக பெயர் வைத்து அசோக்குமாருடன் மீண்டும் தொடர்பு கொண்டதாகவும், இதுகுறித்து அசோக்குமார் தேனி காவல் துறையில் புகார் செய்து, போலீஸார் விசாரித்து விக்னேஷ்வரியை எச்சரித்து அனுப்பியதாகவும், இதனையடுத்து விக்னேஷ்வரி, அசோக்குமாரை கொல்வதற்காக கூலி படையை அனுப்பியிருக்கலாம் எனக் கருதி போலீஸார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
     இதனியைடையே கொடூரமான ஆயுதங்களுடன் கொலை நோக்குடன் தங்கியிருந்ததாக போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து