முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-வது நாளாக பைலட்டுகள் ஸ்டிரைக் 20 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 14 - ஏர் இந்தியா பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 6-வது நாளை எட்டியது. இதை அடுத்து ஏர் இந்தியாவின் 20 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏர் இந்தியா பைலட்டுகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் சட்டவிரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே கண்டித்துள்ளது. ஆனாலும் இதை பொருட்படுத்தாமல் ஏர் இந்தியா பைலட்டுகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பைலட்டுகளின் போராட்டத்திற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இவர்களது போராட்டத்திற்கு மூத்த பைலட்டுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்களது கோரிக்கைகள் நியாயமானது என்றும் இதற்கு உரிய முறையில் தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்றும் மூத்த பைலட்டுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கும் மூத்த பைலட்டுகள் கடிதங்களை அனுப்பியுள்ளனர். நேற்று 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. பைலட்டுகளின் பற்றாக்குறை காரணமாக ஏர் இந்தியாவின் 20 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பபட்டன. டெல்லி மற்றும் மும்பையிலிருந்து செல்ல வேண்டிய 20 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும் தங்களுக்கு டிக்கெட்டிற்கு உரிய பணத்தை ஏர் இந்தியா திருப்பி கொடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கான புக்கிங்கை இம்மாதம் 15 ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 200 பைலட்டுகளில் இதுவரை 78 பைலட்டுகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. பைலட்டுகள் வேலைக்கு திரும்பினால் அவர்களது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்