முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பும்ரா

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : வீட்டிற்குள்ளேயே இருப்பதால் வெப்-சீரியஸை பார்க்கும் ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட பலவற்றின் சந்தாதாரராகியுள்ளேன் என பும்ரா தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆகவே வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வெப்-சீரியஸ் பார்த்து நேரத்தை கழித்து வருகின்றனர். மேலும் முன்னணி வீரர்கள் லைவ்-சாட் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான பும்ரா ஆகியோர் லைவ்-சாட்டின்போது பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். 

21 நாள் லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் போது வெப்-சீரிஸ் பார்த்து வருகிறேன் என்று பும்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பும்ரா கூறுகையில், இந்த நேரத்தில் அம்மாவுக்கு உதவி செய்து கொடுக்கிறேன். மேலும் கார்டனில் வேலைகள் செய்கிறேன். இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். ஒவ்வொரும் நாளும் எழுந்த பிறகு, என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேன். தற்போது சில விஷேசமான செயலிகளை பார்த்து வருகிறேன். ஸ்ட்ரீமிங் வெப்சைட்டுகள், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றில் தற்போது சந்தாதாரராகியுள்ளேன். தற்போது எல்லாவற்றையும் பார்க்க முயற்சி செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து