முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னோஜ் தொகுதி இடைத்தேர்தலில் பகுஜன்சமாஜ் கட்சியும் போட்டியில்லை

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ,ஜூன்.- 7 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் கன்னோஜ் லோக்சபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி போடப்போவதில்லை என்று பகுஜன்சமாஜ் கட்சியும் அறிவித்துள்ளது. இதன்மூலம் டிம்பிள் யாதவ் எளிதாக வெற்றிபெற வாய்ப்பு கிடைத்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கன்னோஜ் லோக்சபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவி ஏற்றுவிட்டதால் அந்த தொகுதியில் காலி இடம் ஏற்பட்டுள்ளது. இதை நிரம்ப இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் அந்த தொகுதியில் டிம்பிள் யாதவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நாங்களும் போட்டியிடப்போவதில்லை என்று பகுஜன்சமாஜ் கட்சியும் அறிவித்துள்ளது. இதன் மூலம் டிம்பிள் யாதவுக்கு வெற்றிவாய்ப்பு மேலும் அறிவித்துள்ளது. அதேசமயத்தில் சமாஜ்வாடி அரசு மீது பகுஜன்சமாஜ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மாநிலத்தில் சமாஜ்வாடி ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மாநிலத்தில் கொள்ளைகள், கொலைகள், கலவரம் அதிகரித்துவிட்டது. இதை ஒடுக்க எனது மகன் அகிலேஷ் யாதவுக்கு 6 மாத கால அவகாசம் கோருகிறார் அவரது தந்தை முலாயம் சிங் என்று செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்