முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதான ஆசிப்-அகர்வாலுக்கு 2 நாள் சி.பி.ஐ. காவல்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 31 - கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியதாக கூறப்படும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் பி.அகர்வால் ஆகியோர்களை 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஏலம் விடப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குறைந்த மதிப்பில் ஏலம் விடப்பட்டதில் ஸ்வான் போன்ற தகவல் தொடர்பு கம்பெனிகள் ஆதாயம் அடைந்துள்ளன. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு கமிஷன் பெற்றிருப்பதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்வான் கம்பெனியின் நிர்வாக அதிகாரியான பல்வாவும் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் கலைஞர் டி.வி.க்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 214 கோடி கைமாறியதாக கூறப்படுகிறது. இந்த பணம் சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் வங்கி கணக்குகள் மூலம் போய் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பால்வாவின் சகோதரர் ஷஹித் பல்வா மற்றும் ராஜீவ் பி அகர்வால் ஆகிய இருவர்களையும் நேற்றுமுன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 

இவர்கள் இரண்டு பேர்களையும் நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சி.பி.ஐ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அகிலேஷ் வாதாடுகையில், கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதற்கு இவர்கள் இருவரும் உதவியாக இருந்துள்ளனர். ஆனால் உண்மையையும் கிரிமினல் சதித்திட்டத்தின் சூழ்நிலை குறித்தும் கூற இவர்கள் மறுத்து வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரையும் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்றுக்கொணட் நீதிபதி சைனி, 2 நாட்களுக்கு சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். குசேஹான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடேபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர்களாக ஆசிப் பல்வாவும் ராஜூவ் பி. அகர்வாலும் இருக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்