முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவிடம் ஆதரவு கேட்பதில் எந்த தயக்கமும் இல்லை-பிரணாப்

திங்கட்கிழமை, 18 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜுன் 17 - ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு தருமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதை அடுத்து,  புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால் காங்கிரசுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் அசோசெம் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜனாதிபதி தேர்தலில் எனக்கு ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பேன். அதேபோல மம்தா பானர்ஜியிடமும் ஆதரவு கோருவதில் எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை என்று தெரிவித்தார். முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது நீண்ட நாள் அரசியல் பயணத்தில், காங்கிரஸ் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் அனைவரிடமும் ஆதரவு கோருவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்