முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா நிர்வாகத்தில் இந்திய பெண்களுக்கு பதவி

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன்,ஏப்.1 - அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்கவாழ் இந்திய பெண்கள் இருவருக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கலை கவுன்சில் உறுப்பினராக சிகாகோவை சேர்ந்த தீபா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். சீன குடியரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல் குழுவின் உறுப்பினராக நிஷா தேசாய் பிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களது பதவியை ஏற்க முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், அவர்களுக்கு தான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் அதிபர் ஒபாமா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தங்களது பதவியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர் என நம்புவதாக அவர் கூறியுள்ளார். இவர்கள் இருவர் தவிர மேலும் 7 பேர் வெவ்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்