முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டியை காண கல்மாடிக்கு அனுமதி

சனிக்கிழமை, 14 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை. 14 - 2012 -ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியைக் காண சுரேஷ் கல்மாடி க்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு - சுரேஷ் கல்மாடி காமன்வெல்த் போட்டியின் நிர்வாகக் குழுத் தலைவராக இருந்தார். காமன்வெல்த் போட்டியில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிய தில் கோடிக் கணக்கில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப் படையில் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்த மாதம் 26-ம் தேதி முதல் அடுத்த மாதம் 13 -ம் தேதி வரை நடைபெற இருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டி யைக் காண தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கல்மாடி சி.பி.ஐ. கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். 

லண்டன் ஒலிம்பிக் போட்டியைக் கா ண சுரேஷ் கல்மாடி செய்திருந்த மனு குறித்து சி.பி.ஐ. சார்பில் பரிசீலிக்கப்ப ட்டது. இறுதியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிப தி தல்வந்த் சிங் இதற்கான அனுமதி யை நேற்று அளித்தார். 

இந்த உத்தரவின் படி, கல்மாடி ரூ. 10 லட்சம் பெறுமான பத்திரம் அளிக்க வேண்டும் என்றும் மற்றொருவர் ரூ. 10 லட்சம் பெறுமான ஜாமீன் வழங்க வே ண்டும் என்றும் நீதிபதி அந்த உத்தரவி ல் தெரிவித்து இருந்தார். 

மேலும், இந்த உத்தரவில் லண்டன் ஒலிம்பிக் போட்டியைக் காண மட்டும் கல்மாடிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதை நீதிமன்றம் தெளிவாக குறிப் பிட்டு இருந்தது. 

மேலும் நீதிபதி தனது உத்தரவில், கல் மாடி சர்வதேச தடகள சங்கத்தின் உறு ப்பினர் என்றும், ஆசிய தடகள சங்கத்தி ன்  தலைவர் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது என்றும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டு ள்ள மற்றவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் எனவே, லண்டன் ஒலிம்பிக்கை காண கல் மாடிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந் தார். 

கல்மாடி இந்த விசாரணையின் போது ஆஜராகாத போதிலும், அவரது வழக்க றிஞர் தொடர்ந்துஆஜரானார் என்றும், கல்மாடி மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்படவில்லை என்றும் நீதிபதி தெரிவித்து இருந்தார். 

லண்டன் ஒலிம்பிக் போட்டியைக் கா ண கல்மாடிக்கு ஐ.ஏ.ஏ.எப். கவுன்சில் சார்பிலும், ஒலிம்பிக் பொது நிகழ்ச்சி யில் கலந்து கொள்வவும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை தடகள சங்க பொதுச் செயலாளர் எஸ்சார் கேப்ரியல் அனுப்பி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்