முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மா காயம் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும் : கவாஸ்கர் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. 

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 3 வடிவிலான போட்டிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்திய அணியின் துணை கேப்டனும், உலகின் சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவருமான ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் ஆடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் அவர் காயம் அடைந்ததால் ஆஸ்திரேலிய பயணத்தில் இடம் பெறவில்லை. 

33 வயதான ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2 ஆட்டத்தில் விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான அவர் காயம் காரணமாக ஆடவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்தது. இதனால் கடந்த 2 போட்டியில் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 

ரோகித் சர்மாவுக்கு காயம் என்று கூறியுள்ள மும்பை அணி நிர்வாகம் எந்த வகையான காயம் என்று தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

வலை பயிற்சியின்போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அது என்ன காயம் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த போட்டிக்கு முன்பு அவர் மீண்டும் வலைப்பயிற்சி செய்தார். 

அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இருந்தால் நிச்சயம் பயிற்சி செய்திருக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் வெளிப்படை தன்மை தேவை. ரோகித் சர்மாவுக்கு என்ன காயம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். 

மும்பை அணி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம். ஆனால் தெரிவிப்பது அவர்களது கடமையாகும். 

இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து