முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய காரணங்களால் 3 முறை நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்

புதன்கிழமை, 5 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் தொடரை தேதி எதுவும் தெரிவிக்காமல் ஒத்திவைத்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். வழக்கமாக கிரிக்கெட் போட்டிகள் மழை மாதிரியான காரணங்களால் கைவிடப்படும். இந்நிலையில் அசாதாரண சூழலால் மூன்று முறை நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் குறித்து பார்ப்போம். 

இங்கி. - பாக். போட்டி

2006-ல் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் பந்தை பாகிஸ்தான் அணி சேதப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டி இங்கிலாந்து அணிக்கு 5 ரன்களை பெனால்டியாக கொடுத்தனர் நடுவர்கள். அதையடுத்து தேநீர் நேர இடைவேளைக்காக களத்தை விட்டு சென்ற பாகிஸ்தான் வீரர்கள் 15 நிமிடங்களுக்கு பிறகும் களத்திற்கு திரும்பவில்லை. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரஸிங் ரூமில் இருந்தனர். அதனால் சிறிது நேரம் காத்திருந்த நடவர்கள் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதனால் போட்டி கைவிடப்பட்டது. பின்னர் நடுவர்கள் கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே நடந்ததாக பின்னாளில் தெரிவித்திருந்தனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். 

இங்கி. - மே.இ.தீவுகள்

1998 ஜனவரி வாக்கில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடின. இந்த தொடரின் முதல் டேடிஸ் போட்டி வெறும் 10.1 ஓவர்கள் வீசிய நிலையில் போட்டி கைவிடப்பட்டது. அதற்கு காரணம் ஆடுகளத்தின் தன்மையில் ஏற்பட்ட மாற்றம் என சொல்லப்பட்டது. 17 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து. அந்த போட்டிக்கு மாற்றாக வேறொரு போட்டி அதே தொடரில் நடத்தப்பட்டது. 

ஆஸி. - இங்கி. போட்டி

1975இல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஸ்கர் தொடருக்கான டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் அன்று போராட்டக்காரர்கள் சிலர் ஆடுகளத்தை சேதப்படுத்தினர். சிறையில் இருந்த குற்றவாளி ஒருவரை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து இந்த செயலை அவர்கள் செய்திருந்தனர். அதனால் போட்டி சமனில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது.  

மே.இ.தீவு - இந்தியா

இதே போல 2002இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்து 300 ரன்களை எடுத்தது. தொடர்ந்து அந்த இலக்கை வீரட்டியது இந்திய அணி. 27.1 ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழந்த நிலையில் 200 ரன்களை குவித்திருந்தது. போட்டியின் போது ரசிகர்களில் சிலர் காலி பாட்டில்களை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை நோக்கி தூக்கி எரிந்த காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து