முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூ மந்திரகாளி - விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

பங்காளிகளைக் கெடுக்கும் எண்ணம் கொண்ட மக்கள் வசிக்கும் ஒரு ஊரின் பெயர் பங்காளியூர். எதற்கும் அஞ்சாத இவர்களுக்கு மாந்ரீகம் என்றால் பயம்.

இதனை சாக்காக வைத்து தங்கள் ஊர் மக்களை திருத்துவதற்க்காக வேறு ஊரிலிருந்து ஒரு மந்திரவாதியை அழைத்துவர புறப்படுகிறான் நாயகன். அவன் எங்கு சென்றான் யாரை அழைத்து வந்தான் என்பதே மீதிக்கதை. முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்ட இந்தப்படத்தில் ஆரம்பத்தில் காட்டப்படும் காட்சிகளே படம் எப்படியானது என்பதை நமக்கு சொல்லி விடுகிறது.

அடுத்து வரும் மந்திர கிராமம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. படம் முழுக்க கையில் கத்தி தூக்கி கொண்டே சுற்றித்திரியும் கிராமத்து ஆள், பெண் வேடத்தில் பயணிக்கும் நண்பன், இரண்டு சிறுமிகளின் ஒற்றுமை, இசை மரம்  என சூனிய கிராமமாகவே திகழ்கிறது.

படத்துக்கு தொழில்நுட்ப குழுவும் கலை இயக்குனர் குழுவும் அபாரமாக உழைத்திருப்பது நன்கு தெறிகிறது. எதார்த்தமாக நடித்திருக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் பாராட்டுக்கள். மொத்தத்தில் தமிழில் ஒரு காமெடி ஃபேண்டஸியான லாஜிக் இல்லாத மேஜிக் படம் சூ மந்திரகாளி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து