முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் தலைவர்கள் கைது: சூடானில் ஆட்சியை கைப்பற்றும் ராணுவம்

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கார்தோம் : ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முயல்கிறது என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சூடான் நாட்டின் இடைக்கால அரசைச் சார்ந்த பல உறுப்பினர்களும், குடிமை அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமையன்று அதிகாலை, அடையாளம் தெரியா ராணுவத்தினர், பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கையும், குறைந்தபட்சம் நான்கு அமைச்சர்களையும் கைது செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இதுகுறித்து, ராணுவத்தினர் கருத்து கூறாத நிலையில், ஜனநாயக ஆட்சிக்கான ஆதரவாளர்கள் வீதிகளில் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்நாட்டில் நீண்டகாலமாக ஆட்சிபுரிந்த ஒமர்-அல்-பஷீரின் ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட பின்னர், ராணுவத்தினருக்கும் குடிமை அரசின் தலைவர்களுக்கும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், தலைவர்களின் கைதுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் தகவல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கைது கூட்டு ராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது என்றும், கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

தலைநகரான கார்தூமில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சாட்சிகள் கூறுகின்றன. மேலும், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் வீதிகளில் ஆவேசமான மக்கள் கூட்டம் டையர்களை எரிப்பதைக் காண முடிகிறது. மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகரம் முழுவதும் ராணுவ மற்றும் துணை ராணுவப்படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம், சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து