முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மட்டன் சுக்கா

Cooking time in minutes: 
45
Ingredients: 

 

மட்டன் சுக்கா செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. மட்டன் -1/4 கிலோ.
  2. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  3. தனியா தூள் - 4 டேபிள் ஸ்பூன்.
  4. கறி மசால் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  5. சின்ன வெங்காயம் – 200 கிராம்
  6. பூண்டு – 6.
  7. தக்காளி -1
  8. இஞ்சிசிறிதளவு.
  9. புதினா,கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  10. பச்சை மிளகாய் – 1
  11. சீரகம் - 50 கிராம்.
  12. மிளகு - 50 கிராம்.
  13. தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
  14. நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
  15. மஞ்சள் 2 சிட்டிகை.
  16. உப்பு -  தேவையான அளவு .

 

Method: 

 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கர் வைத்து சுத்தம் செய்த மட்டன் 1/4 கிலோ போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
  2. 50 கிராம் சீரகத்தை எடுத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. 50 கிராம் மிளகையும்  பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  4. சின்ன வெங்காயம் 100  கிராம் எடுத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  5.  சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு 3 பல் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  6. சிறிதளவு புதினா மற்றும் மல்லியையும்  மிக்சியில் போட்டு   அரைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கிடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 200 கிராம்,பச்சை மிளகாய் ஓன்று, மற்றும் கருவேப்பிலை சிறிதளவு போட்டு வதக்கவும்.
  9. சீரகத்தூள் 1 ஸ்பூன், மிளகுத்தூள் 1 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  10. பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்றையும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு மற்றும் 100 கிராம் சின்னவெங்காய விழுதையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக  வதக்கவும்.
  11. கறி மசால் தூள் 1 டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்,தனியா தூள் 2 டேபிள் ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  12. இதனுடன் 1/4 கிலோ மட்டன் போட்டு நன்றாக  வதக்கவும்.
  13. தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும்.
  14. அரைத்து வைத்த புதினா மற்றும் மல்லி விழுதை போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விட வேண்டும்.
  15. 5 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லியை தூவி இறக்கி விடவும்.
  16. சுவையான மட்டன் சுக்கா ரெடி.     

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago