முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுப்பு

வியாழக்கிழமை, 3 ஏப்ரல் 2025      தமிழகம்
vembakottai

Source: provided

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், முத்திரைகள், செப்புக்காசுகள், தீப விளக்குகள், சிற்பங்கள், உள்பட 4,400-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் ஏற்கனவே கிடைத்து உள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓர் சிறப்பாக தங்கத்தால் செய்யப்பட்ட மணி போன்ற ஆபரணம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்த ஆபரணம் 6 மி.மீ. சுற்றளவு, 4.7 மி.மீ. பருமன், 22 மில்லி கிராம் எடையுடன் உள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

முதல் 2 கட்ட அகழாய்வை காட்டிலும் 3-ம் கட்ட அகழாய்வில் தங்கம் சார்ந்த பழங்கால அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை 7 தங்க பொருட்கள் கிடைத்து இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து