முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நெய் மீன் முட்டை பொரியல்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

நெய் மீன் முட்டை பொரியல் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நெய் மீன் - 1/2 கிலோ.
  2. மிளகுத் தூள் – 3 ஸ்பூன்.
  3. சீரகத் தூள் - 2 டீஸ்பூன்.
  4. கருவேப்பிலை,கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.
  5. உளுந்தம் பருப்பு  100 கிராம்
  6. உப்பு  - தேவையான அளவு.
  7. நல்லெண்ணெய் - 50 மில்லி
  8. முட்டை - 4.
  9. பச்சை மிளகாய் – 15
  10. குடை மிளகாய் -1/2
  11. எலுமிச்சம் பழம் -1
  12. தேங்காய் 1/2 மூடி
  13. பூண்டு – 4 பல்.
  14. இஞ்சி - சிறிதளவு.
Method: 

 

செய்முறை ;

  1. பூண்டு 4 பல் மற்றும் இஞ்சி சிறிதளவு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளை உடைத்து  ஊற்றி சிறிதளவு உப்பு போட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. மிக்சியில் 1/2 மூடி தேங்காய்யை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கிடாய் வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
  5. தண்ணீர் சூடானவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள 1/2 கிலோ நெய் மீன் போட்டு10 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
  6. நன்கு வெந்த உடன் நெய் மீனை பொடிப் பொடியாக உதிர்த்து தனியாக எடுத்து  வைத்துக் கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைக்க வேண்டும்.
  8. நன்கு காய்ந்த உடன்  நல்லெண்ணெய் 50 மில்லி ஊற்றவும்.
  9. எண்ணெய்யை சூடு படுத்திக் கொள்ளவும்.
  10. சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் 100 கிராம் உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக வதக்கவும்.
  11. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 100 கிராம், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  12. இதனுடன் மிக்சியில் அரைத்து  வைத்துள்ள இஞ்சி பூண்டு  விழுது  ஒரு ஸ்பூன்  சேர்த்து வதக்கவும்.
  13. அரைத்து  வைத்துள்ள 1/2 மூடி தேங்காய்யை போட்டு வதக்கவும்.
  14. மிளகுத் தூள் 3 ஸ்பூன்,சீரகத் தூள் 2 டீஸ்பூன் போட்டு வதக்கவும்.
  15. பொடியாக நறுக்கிய 15 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  16. பொடிப் பொடியாக உதிர்த்து வைத்துள்ள நெய் மீனை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
  17. கலக்கி வைத்துள்ள 4 முட்டைகளை ஊற்றி வதக்கவும்.
  18. சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வதக்கவும்.
  19. பொடியாக நறுக்கிய ½ குடை மிளகாய்,சிறிதளவு கொத்தமல்லி,புதினா போட்டு வதக்கவும்.
  20. சிறிதளவு மிளகுத் தூள்,சீரகத்தூள் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
  21. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  22. சுவையான நெய் மீன் முட்டை பொரியல் ரெடி. 

 

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago