முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 17-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. ஸ்ரீவாரி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்பம் பவனி வருகிறது.   முதல் நாள் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர்.

2-வது நாள் கிருஷ்ணசாமி, ருக்மணி தாயார் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 3-வது நாள் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 4-வது நாள் 5 சுற்றுகளும், 5-வது நாள் 7 சுற்றுகளும் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வருகின்றனர்.  

இதனால் ஏழுமலையான் கோவிலில் இன்று மற்றும் 15, 16, 17-ம் தேதிகளில் கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து