முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தில் நதி இருந்ததற்கான அடையாளம்

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜன. 20 - செவ்வாய் கிரகத்தில் 1,500 கி.மீ.நீளமுள்ள நதி இருந்ததற்கான அடையாளம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். ஐரோப்பா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தை அதி நவீன கேமிராவால் படம் பிடித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

செவ்வாய் கிரகத்தில் ரியுல் லாலிஸ் எனும் பள்ளத்தாக்கு பகுதியில் 1,500 கி.மீ. நீளத்திற்கு நதி ஓடியதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. ஆற்றின் வழித்தடம் தெளிவாக உள்ளது. 7 கி.மீ. அகலம் 300 மீட்டர் ஆழமுடையதாக அந்த நதி இருந்துள்ளது. ஆமஸானியன் காலம் மற்றும் ஹெஸ்பேரியன் காலங்களில் பனிப்பாள நகர்வுக்கு பிறகு நீராகவும் நதி ஓடியிருக்கிறது. இந்த நதிக்கு உப நதிகளும், இருந்துள்ளன. 180 கோடி ஆண்டுகள் மற்றும் 350 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இக்காலங்கள் கருதப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்