முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூபுர் சர்மா எதிராக மேற்குவங்க காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      இந்தியா
Nupur-Sharma 2022 07 02

Source: provided

கொல்கத்தா : நூபுர் சர்மா மீது கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். 

கடந்த மே மாத இறுதியில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மா கலந்துகொண்டார். அப்போது அவர் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் பேச்சுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. 

அவரின் கருத்துகளுக்கு கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை பாஜகவில் இருந்து கட்சி மேலிடம் இடைநீக்கம் செய்தது. அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கக் கோரி நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அவரின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே.பி. பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் தொடர்பான தனது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஒட்டுமொத்த நாட்டிடமும் நூபுர் சர்மா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் நூபுர் சர்மா எதிராக கொல்கத்தா காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்த நூபுர்சர்மாவுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே 2 காவல் நிலையங்களில் இருந்து நூபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஆஜராகவில்லை. நூபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையாக கருத்துகளை கூறியிருந்த நிலையில் தற்போது கொல்கத்தா காவல்துறையினல்ர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து