முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூக்கடைப்பு, தும்மல் நிற்க, சளி தீர, சுவாச நோய் அலர்ஜி, தைராய்டு பிரச்சனைகளுக்கு

siddha-4

  • இழுப்பு தீர ;-- காக்கிரட்டான் விதையை நெயில் வறுத்து பொடி செய்து 5 அரிசி எடை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • நீர் கோர்வை தீர ;-- கறிவேப்பிலையை பொடி செய்து சர்க்கரை சேர்த்து காலை,மாலை ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்.
  • மேல் சுவாசம்,இருமல் தீர ;-- திருநீற்று பச்சிலை சாறை தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.
  • இரைப்பிருமல் தீர ;-- நீர் முள்ளி விதை பொடியை ஒரு கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரவும்.
  • தும்மல் நிற்க ;-- தூதுவளை  பொடியுடன் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது  பாலில்  சாப்பிட குணமாககும்.
  • மூச்சு வாங்கும் தொந்தரவு தீர ;-- தூதுவளை மாமருந்தாகும்.
  • சுவாசக்கோளாறுகள் நீங்க ;-- தினந்தோறும் பிராணயாமம் செய்து வரலாம்.
  • இளைப்பு தீர ;-- விளாமர கொழந்தை அரைத்து பாலில் ஒரு கிராம் சாப்பிடலாம்.
  • மூச்சிறைப்பு,வீக்கம்,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரசனைகளுக்கு தீர்வு ;-- ஆரஞ்சு நிற ஒளி தீர்வு கொடுக்கும்.
  • இரைப்பு குணமாக ;-- தூதுவளைஇலை,வேர்,பூ,காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்.
  • மாந்த இழுப்பு குணமாக ;-- மூக்கிரட்டை வேர்,மிளகு உத்தாமணி சாறு ஆகியவற்றை விளக்கெண்ணையில் போட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு 2 மில்லி அளவு கொடுக்கலாம்.
  • சளி தீர ;-- நத்தை சூரி இலை சாறை 15 மில்லி காலை,மாலை சாப்பிட சளி தீரும்  
  • மூச்சு வாங்குதல்,காது அடைத்தல்,காது மந்தம் விலக;-- தூதுவளை உண்பதால் குணமாகும்.
  • மூக்கில் உள்ள புண் ஆற ;-- மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.
  • மூக்கு சம்பந்தமான நோய் குணமாக;-- நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உட்கொள்ளலாம்
  • மூச்சு திணறல் ;-- ஆடாதொடை இலை சாறை தேனில் கலந்து சாப்பிடலாம்.
  • மூக்கில் நீர் வடிதல்  குணமாக ;-- தழுதாழை இலை சாறை மூக்கில் உறிஞ்ச  குணமாகும்.
  • சுவாச உறுப்புக்கள் துப்புறவாக ;-- முசுமுசுக்கை வேர்   ஆடாதொடை வேர் பொடி திப்பிலி, சுக்கு மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் உட்கொண்டு பால் அருந்தலாம்.
  • சுவாச நோய் அலர்ஜி ;-- குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ளலாம்.
  • நீர் கோர்வை தீர ;-- இஞ்சி சாறு,பால் நல்லெண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தேய்த்து குளித்து வரலாம்.
  • தொடர் தும்மல் நீங்க ;-- அகத்திக்கீரை சாறு மற்றும் அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
  • மூக்கடைப்பு நீங்க ;-- புதிய ரோஜா மலரை முகரலாம்.
  • மூக்கடைப்பு சளி குணமாக ;-- கடுக்காய் பொடி,நெல்லிக்காய் பொடி இரண்டையும் தேனில் கலந்து சாப்பிடலாம்.
  • சளி, இருமல் வரவிடாமல்  தடுக்க ;-- மழை காலங்களில் முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வரலாம்.
  • மூச்சு திணறல் குணமாக ;-- வன்னி மரப்பட்டையை தூளாக்கி காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடித்து வரலாம்.
  • தைராய்டு பிரச்சனைகளுக்கு ;-- கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வர சரியாகி விடும்.
  • இரத்தம் வருவது நிற்க ;-- மாதுளம்பழ சாறு மற்றும் அருகம்புல் சாறு சம அளவு கலந்து '30 மில்லி மூன்று வேளை சாப்பிடலாம்.
  • மூக்கில் நீர் வடிதல் குணமாக ;-- வேப்ப இலை,ஓமம்  இரண்டையும் அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொள்ளலாம்.
  • சுவாச உறுப்புகளில் சளி தேக்கம் நீங்க ;-- வல்லாரை பொடி,தூதுவளை இரண்டையும்பாலில் கலந்து குடித்து வர நீங்கும்.
  • இரைபிருமல் தீர ;-- மருதம் பட்டை,சித்திரத்தை,திப்பிலி,சுக்கு ஆகியவற்றை கஷாயம் செய்து 48 நாட்கள் குடித்து வர தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago