முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக விமானங்கள் இயக்க நடவடிக்கை

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      தமிழகம்
Chennai-Airport 2024-10-01

Source: provided

ஆலந்தூர் : கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ள நிலையில் விரைவில் கல்வி நிலையங்களில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்க பெரும்பாலானோர் வெளியூர் மற்றும் வெளி நாடுகள் போன்றவைகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதனால் வெளி மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் விமானங்களிலும், வெளிநாடு செல்லும் விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. கட்டணமும் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் வழக்கமாக வருகை புறப்பாடுகள் பயணிகள் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சுமார் 50,000 ஆக இருந்தது, தற்போது இது 60 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கோடை விடுமுறை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. 

சென்னை-இலங்கை இடையே ஏர் இந்தியா விமான நிறுவனம் வாரத்தில் 7 விமானங்களை இயக்கி வந்தன. இது வாரம் 10 விமானங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை-இலங்கை இடையே 7 விமான சேவைகளை புதிதாக தொடங்குகிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு, மழைக்காலத்தில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கோடை சிறப்பாக, சென்னை-யாழ்ப்பாணம் இடையே வாரம் 7 விமான சேவைகளை தொடங்க உள்ளது.

இவை தவிர சென்னை-குவைத் இடையே வாரத்தில் 5 விமானங்கள் இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இனிமேல் வாரத்தில் 7 விமானங்களும், சென்னை-மஸ்கட் இடையே வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் வாரத்தில் இரண்டு நாட்களும், சென்னை- தமாம் இடையே, வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்ட விமானம், இனிமேல் 3 நாட்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரத்தில் 7 நாட்கள், சென்னை-குவைத் இடையே விமான சேவையை புதிதாக தொடங்குகிறது. மேலும் ஓமன் ஏர்வேஸ் நிறுவனம், சென்னை-மஸ்கட் இடையே வாரத்தில் 11 விமானங்களை இயக்கியது, இனிமேல் 14 விமானங்களாகவும், சென்னை-பக்ரைன் இடையே கல்ப் ஏர்வேஸ் நிறுவனம் வாரம் 7 விமானங்களை இயக்கியது, இனிமேல் 10 விமானங்களாகவும், சென்னை-டாக்கா இடையே யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் நிறுவனம் வாரம் 3 விமானங்களை இயக்கியது. இனிமேல் 11 விமானங்களை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோடை காலத்தில் சம்மர் ஸ்பெஷல் விமானங்களாக, மொத்தம் 42 புதிய சர்வதேச விமானங்கள் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல் உள்நாட்டு விமானங்களில், ஏர் இந்தியா விமான நிறுவனம் சென்னை-பெங்களூரு இடையே தற்போது வாரத்தில் 12 விமானங்கள் இயக்கி வரும் நிலையில், இனிமேல் அது 23 ஆகவும், டெல்லிக்கு 70 விமானங்கள் இயக்கி வரும் நிலையில் இனிமேல் 77 விமானங்க ளாகவும், மதுரைக்கு 7 விமானங்கள் இயக்கி வரும் நிலையில், இனிமேல் 14 விமானங்களாகவும், மும்பைக்கு இயக்கப்படும் 42 விமானங்கள் 49 விமானங்களாகவும் ஏர் இந்தியா அதிகரித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கொச்சிக்கு இயக்கும் 2 விமானங்களை, 14 ஆகவும், கவுகாத்திக்கு இயக்கும் 7 விமானங்களை, 21 விமானங்களாகவும், ஐதராபாத்துக்கு இயக்கும் 7 விமானங்களை, 21 விமானங்களாகவும் வாரணாசி, நொய்டாவுக்கு 7 விமானங்களும் புதிதாக இயக்குகின்றன.

இதைப்போல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தூத்துக்குடிக்கு இயக்கும் 28 விமானங்களை 35 ஆகவும், திருச்சிக்கு இயக்கும் 46 விமானங்களை 49 ஆகவும், கொச்சிக்கு இயக்கும் 40 விமானங்களை 47 ஆகவும், அகமதாபாத்துக்கு இயக்கும் 27 விமானங்களை 28 ஆகவும் அதிகரித்து இயக்க முடிவு செய்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், அயோத்தி, கொச்சி, ஐதராபாத் மதுரை, தூத்துக்குடி, புனே சீரடி, சிவமுகா ஆகிய விமான நிலையங்களுக்கு கூடுதலாக, விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதைப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சம்மர் ஸ்பெஷலாக, 164 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதில் பல விமான சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. 

மற்ற விமான சேவைகள் படிப்படியாக, பயணிகள் கூட்டம் மற்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறை பயணிகள் கூட்டத்தை சமாளிக்க, கோடை காலம் முழுமைக்கும் 42 சர்வதேச விமானங்கள், 164 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 206 கோடை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து