முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயதான தம்பதி மீது நாயை ஏவி வேடிக்கை பார்த்த உரிமையாளர்

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      தமிழகம்
Rottweiler

சென்னை, வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி உரிமையாளர கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேவேளை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களை வளர்க்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி இதுபோன்ற நாய் வகைகளை சிலர் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கொளத்தூர் புத்தாகரம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதி மாரியப்பன் மற்றும் அவரது மனைவி தெருவில் நின்று கொண்டிருந்தபோது ராட்வீலர் நாய் தொல்லை கொடுத்துள்ளது. இது குறித்து நாயின் உரிமையாளர் கவியரசனிடம் தட்டிக்கேட்டனர். 

இதனால் ஆத்திரடமடைந்த கவியரசன், தனது ராட்வீலர் நாயை ஏவி விட்டு வயதான தம்பதியை கடிக்க விட்டுள்ளார். ராட்வீலர் நாய் அந்த தம்பதியை கடிக்க துரத்தியபோது நாயை தடுக்காமல் கவியரசன் வேடிக்கை பார்த்துள்ளார். வயதான தம்பதியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கவியரசனை கண்டித்துள்ளனர். ஆனால், தனக்கு காவல்துறையில் உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் தெரியும் என கூறி அவர்களையும் கவியரசன் மிரட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கவியரசன் மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து