முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்தப்பட வக்பு மசோதா அவசியம் : பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சு

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      இந்தியா
Kiran-Rijiju 2024-11-18

Source: provided

டெல்லி : வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்பு மசோதா தேவை. 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் நேற்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்து பேசினார். 

இன்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளன. ஒடிசா மாநிலம் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கும். எங்களுடைய கோரிக்கைகள் பாராளுமன்ற கூட்டுக்குழுவால் நிராகரிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இனிமேல் வக்ஃபு மசோதா, ஒருங்கிணைந்த வக்ப் மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு மசோதா என மறுபெயரிடப்படும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களவையில் பேசும்போது "வக்ப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்பு மசோதா தேவை. 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்; நீங்கள் எவ்வளவு காலம் அவர்களை தவறாக வழிநடத்த விரும்புகிறீர்கள்?. வக்பு மசோதாவை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் நாடு பல நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வக்ப் சொத்துக்கள் இந்தியாவில்தான் உள்ளன. வக்ப் சொத்துக்கள் தனியார் இயல்புடையவை, ரயில்வே, ஆயுதப்படைகளின் நிலங்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago
View all comments

வாசகர் கருத்து