முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோ வீரருக்கு அபராதம்

புதன்கிழமை, 2 ஏப்ரல் 2025      விளையாட்டு
Lucknow 2025-03-28

Source: provided

லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டமிழந்ததும்...

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜெயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இந்தப் போட்டியில் அசத்தலாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக அரைசதம் விளாசினர். இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஷ் ஆர்யா, லக்னோ வீரர் திக்வேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆர்யா ஆட்டமிழந்ததும் அவர் அருகில் சென்ற திக்வேஷ் கையெழுத்து போடுவது போல சைகை காட்டினார்.

கட்டணத்தில்....

பிரியன்ஷ் ஆர்யா மற்றும் திக்வேஷ் ரதி இருவரும் தில்லி அணிக்காக விளையாடி வருகின்றனர். மேலும், இருவர்களும் நண்பர்கள் என்பதால், அவர் அப்படி காண்பித்தார். எதுவாயினும், போட்டிக்களத்தில் எதிரணி வீரரை விமர்சிப்பது சட்டவிரோதமானது. இதனால், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் இதுபோன்று சைகை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 2019 ஆம் ஆண்டு இந்தியா - மேற்கிந்திய தீவுகள் போட்டியில் விராட் கோலியிடம் வில்லியம்ஸ் இதேபோன்று வம்பிழுக்க அவரை விராட் கோலி தனது பாணியில் அடித்து துவைத்தது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து