முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மீன் தொக்கு

Cooking time in minutes: 
30
Ingredients: 

மீன் தொக்கு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. வெள்ளை கிழங்கான் மீன் - 1/2 கிலோ.
  2. பொடியாக நறுக்கிய தக்காளி –1/2 கிலோ.
  3. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கிலோ.
  4. சின்ன வெங்காயம் 20.
  5. பூண்டு – 10 பல்.
  6. சோம்பு - 1 ஸ்பூன்.
  7. சீரகம் - 1 ஸ்பூன். 
  8. வெந்தயம் - 1 ஸ்பூன்.
  9. கடுகு,உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்.
  10. புளி - எலுமிச்சம் பழ அளவு.
  11. ரிபைன்ட் ஆயில் - 4 ஸ்பூன்.
  12. மீன் மசாலா தூள் - 2 ஸ்பூன்.
  13. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
  14. காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
  15. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  16. மஞ்சள்தூள் - 1/2  ஸ்பூன்.
  17. உப்பு - தேவையான அளவு.
Method: 

மீன் தொக்கு செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தை எடுத்து எலுமிச்சம் பழ அளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு கப் அளவுக்கு புளிக்கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2.  மிக்சியில் சின்ன வெங்காயம் 20, பூண்டு 10 பல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தை எடுத்து சுத்தம் செய்த 1/2 கிலோ வெள்ளை கிழங்கான் மீன் மற்றும் சிறிதளவு மஞ்சள்தூளை போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கிடாய் வைத்து 2 ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்,எண்ணெய்யை சூடு படுத்திக் கொள்ளவும்.
  5. இதனுடன் சிறிதளவு,உளுந்தம் பருப்பு,கடுகு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  6. பொடியாக நறுக்கிய 1/2 கிலோ பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு  நன்றாக வதக்கவும்.
  7. பொடியாக நறுக்கிய 1/2 கிலோ தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  8. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு  விழுதை சேர்த்து வதக்கவும்.
  9. கரைத்து வைத்துள்ள ஒரு கப் புளி கரைசலை ஊற்றி கலந்து விட்டு 2 நிமிடம்  கொதிக்க வைக்க வேண்டும்.
  10. மீன் மசாலா தூள் 2 ஸ்பூன், கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன். காஷ்மீர் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், சுத்தம் செய்த 1/2 கிலோ வெள்ளை கிழங்கான் மீன், ரிபைன்ட் ஆயில் 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கலந்து விட்டு மூடி போட்டு மூடி 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  11. சிறிதளவு ,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி போடவும்
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான மீன் தொக்கு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago