முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் நடவடிக்கை: பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.20 - தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேறக்கூடாது. மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும்,நாளையும் (பிப்.20-21)நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனை கை விடும்படி மன்மோகன் சிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கக் கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்திய, பணியாளர் மற்றும் பயிறசித்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

பணியாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி ஊக்குவிக்க எந்த ஒரு அமைப்புக்கும் உரிமை கிடையாது, இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் சில தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது. ஆகவே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் அரசுப் பணியாளர்கள் பங்கேற்ககூடாது. தற்செயல் விடுப்பு, தாமதமாக செல்லுதல் உட்பட எந்த வகையிலும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது.  மீறினால் சம்பளப்பிடித்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட அரசுத்துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வேலை நிறுத்தத்தில் பங்கேஏற்றவர்களின் விபரங்கள் அன்று மாலையே மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு அனுப்பி வைக்கவேண்டும். வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட தினத்திற்கு பின் எவ்வகை விடுப்புகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது. வேலை நிறுத்த நாளில் வரும் பணியாளர்கள் அலுவலகத்துக்குள் வருவதற்கு எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது. அதனை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்